/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை இணைக்க வேண்டும்; சத்துணவு பணியாளர்கள் எதிர்பார்ப்பு
/
பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை இணைக்க வேண்டும்; சத்துணவு பணியாளர்கள் எதிர்பார்ப்பு
பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை இணைக்க வேண்டும்; சத்துணவு பணியாளர்கள் எதிர்பார்ப்பு
பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை இணைக்க வேண்டும்; சத்துணவு பணியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 01, 2025 05:38 AM

மதுரை : ''பள்ளி, அங்கன்வாடி மையங்களை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து சத்துணவுத் துறை என தனித்துறை உருவாக்க வேண்டும்'' என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த அமைப்பினர் சத்துணவு பணியாளர்களுக்கு, முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் ஆட்சி மாறும்போதெல்லாம் தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தில் முட்டை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, தினமும் ஓர் உணவு என திட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றனர். இதனால் திட்டச் செலவு ரூ. பல கோடிகளில் உயர்கிறது.
இதனால் பகுதிநேர பணியாளர்கள், முழுநேர பணியாளர்களாக பணியாற்றும் சூழல் உள்ளது.
ஆனால் அவர்களின் கோரிக்கைகளான காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம், பத்தாண்டு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு போன்றவை முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிறைவேறாமல் உள்ளது.
இதையடுத்து சத்துணவு பணியாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அவரவர் நிலைக்கேற்ப குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்து, அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். தொடர்ந்து பத்தாண்டுகளுக்குமேல் பணியாற்றுவேருக்கு அனைத்துத்துறை காலியிடங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பதிவுறு எழுத்தராக பணிவழங்க வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு முதல்வர் இலவச மருத்துவ காப்பீடு அட்டை, பணிக்கொடையை அமைப்பாளருக்கு ரூ.2 லட்சம், உதவியாளருக்கு ரூ.ஒரு லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.
பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களில் உள்ள பணியாளர்களின் காலியிடங்களை அடுத்தாண்டு ஜூன் 1 க்குள் நிரப்ப வேண்டும். மேற்கண்ட இந்த 2 சத்துணவு மையங்களையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து சத்துணவுத்துறை என்ற பெயரில் தனித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பின் மாநில தலைவர் குணசேகரன் கூறுகையில், ''எங்கள் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி முதல்வரிடம் மனு வழங்குவதற்காக, அடுத்தாண்டு மார்ச் 3, 4, 5 ம்தேதிகளில் சென்னையில் 72 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.