ADDED : டிச 19, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவி மேகலாதேவி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஒய்யம்மாள் வரவேற்றார். உமாமகேஸ்வரி, வீரம்மாள், உமாராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சோலையன் துவக்கி வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி, அரசு ஊழியர்கள் சங்கமாவட்ட செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பேசினர். சத்துணவு மையங்களில் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிநியமனம்செய்ய முடிவு செய்துஉள்ள அரசை கண்டித்துஆர்ப்பாட்டம் நடந்தது. பொருளாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.