/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 05:01 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியம், பண்டிகை முன்பணம் உள்பட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் அய்யங்காளை, மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தவுலத், முத்துமீனா, ஜெயா, இணைச் செயலாளர்கள் இந்துமதி, வனிதா, ரோசரி செல்வா பிளாரன்ஸ் முன்னிலை வகித்தனர். செயலாளர் புஷ்பம், ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் பால்முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் நிர்மலா நன்றி கூறினார்.