/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
/
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 21, 2024 04:50 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகாவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது கடைமடை கண்மாய்களுக்கு முதலில் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அமைக்க வேண்டும். கண்மாய்கள், ஓடைகள் உட்பட நீர்நிலைகள்,, திருமங்கலம் பிரதானக் கால்வாய் ரோடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை வாரம் 2 கண்மாய்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும். கண்மாய்களில் வண்டல்மண் எடுக்க 124 விவசாயிகள் மனு கொடுத்திருந்தனர். இவற்றில் 115 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தாசில்தார் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

