ADDED : பிப் 13, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழா நடத்துவதற்கான 15ம்நாள் கூடுகை நேற்று நடந்தது.
எட்டும் இரண்டும் பத்து தேவர்கள், ஐந்து பூஜாரிகள், கோடாங்கிகள், அக்கா மக்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதெனமுடிவு செய்யப்பட்டது.
பூஜாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருவிழாவிற்கு கொல்லிமலை ராக்கு, பிரம்மகுல ராக்கு சிலை செய்வதற்காக அனைவரும் இணைந்து மண் எடுத்து கொடுத்தனர்.