நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: வகுரணி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டிப்பட்டி- சேடபட்டி- உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு குழாய் பழுதடைந்ததால் 3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
குடிநீர் இணைப்பை சரிசெய்யக்கோரி தொடர்ந்து முறையிட்டு வந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழுதடைந்த பகுதியை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சமரசம் செய்தனர்.