/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கு செலவுக்கு ரூ.பல கோடி 'தாராளம்' அகவிலைப்படி வழங்க நிதி வசதி இல்லையா பல்கலை பதிவாளரிடம் அலுவலர்கள் வாக்குவாதம்

ADDED : ஆக 07, 2025 11:37 PM
மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலையில் வழக்குகளுக்காக ரூ.பல கோடி செலவிட நிதி உள்ளது; ஆனால் அரசு வழங்கிய அகவிலைப் படியை வழங்க நிதி இல்லாமல் போனதா' என பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணனிடம் பல்கலை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்பல்கலையில் நிதி நெருக்கடி என்ற பெயரால் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது.
அரசு நிதி ஒதுக்கினால் ஒன்று, இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டும், பிற நேரங்களில் பல மாதங்களாக சம்பளம் வழங்காமலும் உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கிய அகலைவிலைப் படியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆக., முதல் டிசம்பர் வரை அகவிலைப்படி நிலுவையும், இந்தாண்டு ஜன.,முதல் தற்போது வரை அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பதிவாளரிடம் பலமுறை முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை.
நேற்று பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் பதிவாளரை சந்தித்து முறையிட்டது.
அப்போது 'பல்கலை வழக்குகள் செலவிற்காக ரூ. இரண்டரை கோடிக்கும் நிதி ஒதுக்க முடிகிறது. நிலுவையில் இருந்த டெண்டர்களுக்கு ரூ.பல லட்சம் பணம் வழங்க முடிகிறது.
ஆனால் அலுவலர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மட்டும் வழங்க பல்கலையில் நிதியில்லையா' என வாக்குவாதம் செய்தனர்.
அப்போது 'அதிகாரிகள் சொல்வதை நிறைவேற்றும் பணியை தான் செய்ய முடியும்' என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பதிவாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதை கண்டித்து பதிவாளர் அலுவலகம் முன் திருவள்ளுவர் சிலை அருகே நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் முத்துராமலிங்கசாமி முன்னிலை வகித்தனர்.
விரைவில் அகவிலைப்படியை வழங்க உயர்கல்வி செயலாளர், பல்கலை கன்வீனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏராளமான அலுவலர்கள் பங்கேற்றனர்.