நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ., முத்துப்பாண்டியின் குடும்பத்தினரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன், திருமங்கலம் ஏ.எஸ்.பி. அன்ஷுல் நாகர், சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு எஸ்.ஐ., கிருஷ்ணபாண்டி, விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, ராஜ்குமார் ஆறுதல் கூறினர்.
இந்த சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து நிவாரணங்களையும் பெற்றுத்தருவதுடன் குழந்தைகளின் கல்வி செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர், அதிகாரிகள் தெரிவித்தனர்.