/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்குவாரிகளில் ஆர்.டி.ஓ., தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
/
கல்குவாரிகளில் ஆர்.டி.ஓ., தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
கல்குவாரிகளில் ஆர்.டி.ஓ., தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
கல்குவாரிகளில் ஆர்.டி.ஓ., தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 19, 2025 07:28 AM
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா கல்லணை, புதுார், அச்சங்குளம், உலகாணி நெடுங்குளம் பகுதிகளில் 8க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. மேலும் புதிதாக 3 குவாரிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் இரண்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் விதி மீறல்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை ஆர்.டி.ஓ., சிவஜோதி, கள்ளிக்குடி தாசில்தார் சிவகுமார், திருமங்கலம் டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வம், குண்டாறு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், புவியியல், சுரங்கத் துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குவாரிகளில் கனிம வளங்கள் விதிமீறி எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
கல்லணை கிராம கமிட்டியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

