/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலிதீன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தயக்கம்
/
பாலிதீன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தயக்கம்
ADDED : செப் 08, 2025 06:11 AM
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் பேரையூர், டி. கல்லுப்பட்டி, ஏழுமலை பேரூராட்சிகள் மற்றும் 72 ஊராட்சிகள் உள்ளன.
இத்தாலுகாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் 40 மைக்ரனுக்கு குறைவான பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் அதிகாரிகள் தடை செய்த பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டை தடுத்தனர். துவக்கத்தில் மிக அதிவேகமாக இருந்த இந்த நடவடிக்கை பின்னர் கண்துடைப்பாக மாறியது. இதனால் பாலிதீன் பொருட்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண், விலங்குகளுக்கு எதிரியான பாலிதீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தாமல் தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடை செய்த பாலிதீன் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு கால்நடைகள் உயிருக்கும் பாதுகாப்பாற்ற நிலை நீடித்து வருகிறது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையான விஷயம். பாலிதீன் பயன்பாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.