/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிரம்பி வழியும் பெரிய அருவி நீர்தேக்கம் தண்ணீரை திறக்க அதிகாரிகள் தயக்கம்
/
நிரம்பி வழியும் பெரிய அருவி நீர்தேக்கம் தண்ணீரை திறக்க அதிகாரிகள் தயக்கம்
நிரம்பி வழியும் பெரிய அருவி நீர்தேக்கம் தண்ணீரை திறக்க அதிகாரிகள் தயக்கம்
நிரம்பி வழியும் பெரிய அருவி நீர்தேக்கம் தண்ணீரை திறக்க அதிகாரிகள் தயக்கம்
ADDED : ஜன 01, 2025 06:29 AM

மேலுார் : கேசம்பட்டி ஊராட்சியில் பெரிய அருவி நீர்தேக்கம் நிரம்பியும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த ஊராட்சியில் அழகர், முண்டா மற்றும் அருவி மலை என மூன்று மலைகளின் அடிவாரத்தில் 8 சதுர கி., மீட்டர் பரப்பளவில் பெரிய அருவி நீர்தேக்கம் உள்ளது.
இந்நீர் தேக்கத்தில் 27 அடி வரை நீரை சேமிப்பதன் மூலம் கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், பட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 1969ல் அப்போதைய அமைச்சர் கக்கனால் பெரிய அருவி நீர்தேக்கம் கட்டப்பட்டது.
மூன்று மலைகளில் இருந்து வற்றாது தொடர்ந்து வரும் தண்ணீரைக் கொண்டு இரு போகம் நெல் விவசாயமும், மூன்று போகம் தானியங்களும் பயிரிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது தொடர்ந்து பெய்த மழையினால் பெரிய அருவி நீர் தேக்கம் நிரம்பி தண்ணீர் மறுகால் செல்ல ஆரம்பித்துள்ளது. ஆனால் நீர்வள துறையினர் தண்ணீர் திறக்காததால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
விவசாய சங்கத் தலைவர் பழனிச்சாமி: தண்ணீர் திறக்காததால் நெற் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தவிர கண்மாய்கள் நிரம்பாததால் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.
தண்ணீர் திறக்காததால் மறுகால் பாயும் தண்ணீர் பாசன கால்வாயில் செல்லாமல் பல்வேறு வழித்தடங்களில் சென்று வீணாகிறது. தண்ணீர் திறக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் திறக்கவில்லை என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், உடனடியாக தண்ணீர் திறக்கப்படும்என்றார்.

