/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள்
/
கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள்
ADDED : மே 15, 2025 02:10 AM
திருமங்கலம்; திருமங்கலம் நகராட்சியில் உள்ள இறைச்சிக் கடைகளில் நேற்று சுகாதார அலுவலர் சண்முகவேல், ஆய்வாளர்கள் சிக்கந்தர், வனஜா, தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பல கடைகளில் காலாவதியான இறைச்சிகள் குளிர்சாதன பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 200 கிலோவுக்கு மேல் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்த சுகாதார துறையினர் கடைக்காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் ஓட்டல்கள், சிறிய உணவகங்களில் பெட்டிகளில் வைத்திருந்த கெட்டுப்போன பரோட்டாக்கள், சப்பாத்தி, தோசை மாவு, வடையை பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்க வைத்திருந்த 4 கடைகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.
மக்களுக்கு சுகாதாரமான உணவையே வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்காதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஓட்டல்களில் பார்சல்களுக்கு பிளாஸ்டிக்கை தவிர்த்து, வாழை இலைகளையே பயன்படுத்த வேண்டும். ஓட்டலில் அமர்ந்து சாப்பிடுவோருக்கு வாழை இலைகளையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
பறிமுதல் செய்த இறைச்சி, உணவுப் பொருட்கள் நகராட்சி நுண் உரக் கூடத்தில் வைத்து அழிக்கப்பட்டது.