நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை - நத்தம் ரோட்டில் 70 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக இந்திய செஞ்சிலுவை சங்க மதுரை கிளைக்கு தகவல் கிடைத்தது.
செயலாளர் ராஜ்குமார், உறுப்பினர் அறிவழகன், சமூகப்பணி மாணவர்கள் கோபி, அலெக்ஸ் ஆகியோர் மூதாட்டியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூதாட்டியின் உறவினர்கள் சோழவந்தான் பகுதியில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். தகவல் தெரிந்தவர்கள் 99947 02708 ல் தொடர்பு கொள்ளலாம்.

