/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் ஜன.21ல் தெப்பத்திருவிழா
/
குன்றத்தில் ஜன.21ல் தெப்பத்திருவிழா
ADDED : ஜன 04, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன.,12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவிழா நடக்கும் ஜன., 21வரை தினம் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.
ஜன., 20ல் தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுத்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜன., 21 ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கும். அன்றிரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சம்ஹாரம் லீலை நடைபெறும்.