/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒருபுறம் அதிகாரிகள் 'டார்ச்சர்' மறுபுறம் மக்கள் எதிர்ப்பு ; கட்டாய வரி வசூலால் ஊராட்சி செயலாளர்கள் தவிப்பு

ADDED : ஏப் 27, 2025 05:36 AM
திருமங்கலம் : மதுரை மாவட்ட ஊராட்சிகளில் கட்டாய வரிவசூல் செய்யுமாறு அதிகாரிகள் 'டார்ச்சர்' மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பால் ஊராட்சி செயலாளர்கள் மனஅழுத்தத்திற்குள்ளாகி உள்ளனர்.
மாவட்ட ஊராட்சிகளில் வரி சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கூரை வீடுகளுக்கு சதுர அடிக்கு 40 காசு, ஓட்டு வீடுகளுக்கு 60 காசு, கான்கிரீட் வீடுகளுக்கு ஒரு ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கான்கிரீட் வீடுகளுக்கு ரூ. 300 முதல் ரூ.ஆயிரம் வரை வரி உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பல கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போதும் சில ஊராட்சி தலைவர்களின் முறைகேடு, அதிகாரிகளின் முறைகேடால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய்கள் முழுமையாக இணைக்கப்படவில்லை. கணக்கில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களிலும் முழுமையாக தண்ணீர் விநியோகம் இல்லை.
மதுரை மாவட்டத்தில் 100 சதவீத வரி வசூலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் ஊராட்சி செயலாளர் வரி வசூல் செய்து அதை அறிக்கையாக அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரி வசூலிக்காத ஊராட்சி செயலாளர்களிடம் வீடியோ, ஆடியோ கான்பரன்ஸில் கேள்வி கேட்கின்றனர்.
கிராம பகுதிகளில் 6 மாதங்களுக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்திற்கான பணம் முழுமையாக வரவு வைக்கப்படாததால் கிராம மக்கள் வரி கட்டுவதில் சுணக்கம் காட்டுகின்றனர்.
ஊராட்சி செயலாளர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை செலுத்தி 'முழு வரிவசூல்' என அதிகாரிகளுக்கு கணக்கு காட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தினமும் 'டார்ச்சர்', பொதுமக்கள் எதிர்ப்பால் ஊராட்சி செயலாளர்கள் மன அழுத்தத்திற்குள்ளாகி உள்ளனர்.