ADDED : ஜன 31, 2025 07:22 AM
மதுரை; ''மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் நுாறு பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர்'' என அரசு மருத்துவமனை தோல்நோய் பிரிவு துறைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சுவாசத்தின் மூலம் தொழுநோய் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு நோய் இருந்தால் தொழுநோய் குறைந்துள்ளது என்று அர்த்தம். உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் தொழுநோயின் தாக்கம் அதிகம்.
அடுத்ததாக பிரேசில், இந்தோனேசியாவில் உள்ளது. இந்தியாவில் பீஹார், மேற்கு வங்கம், ஒடிசாவில் ஒரு சதவீத பாதிப்பும் தமிழகத்தில் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
உணர்ச்சியற்ற தேமலாக உடலில் பல இடங்களில் காணப்பட்டால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். மாதம் 10 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
இதில் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தோரும் அடங்குவர். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 100 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கு மாத்திரை சாப்பிட்டு புறநோயாளியாக சிகிச்சை பெறலாம் என்றார்.

