ADDED : ஏப் 16, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் கரிசல்காளாம்பட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி 55, திண்டுக்கல் கொடை ரோட்டில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர் நேற்று திருமங்கலத்தில் உறவினரை பார்க்க சென்று விட்டு டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) கரிசல்களாம்பட்டிக்கு திரும்பினார்.
மேலக்கோட்டை விலக்கு அருகே சென்றபோது மதுரை --விருதுநகர் நான்கு வழிச்சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.