ADDED : செப் 22, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் 18, டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு நண்பர் சச்சினுடன் பொருட்கள் வாங்க டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார்.
உசிலம்பட்டி ரோடு தாளை முத்தையா கோயில் அருகே திருமங்கலத்தில் இருந்து தேனிக்கு சென்ற தனியார் பஸ் மோதியதில் ரமேஷ் சம்பவயிடத்திலேயே பலியானார்.
காயம் அடைந்த சச்சின் சிகிச்சையில் உள்ளார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.