ADDED : ஜூலை 06, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருநகர் நிலையூர் முனியாண்டிபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் அழகு 28. இவர் நேற்று டூவீலருக்கு பெட்ரோல் போடுவதற்காக சமயநல்லூர் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சென்றார்.
இவருடன் இவரது அக்கா மகன்கள் 13, 14 வயதுடைய 2 சிறுவர்களும் சென்றனர். சம்பக்குளம் பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டின் சென்டர் மீடியனில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அழகு சம்பவ இடத்திலேயே பலியானார். இரு சிறுவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.