/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'முதல்வர், துணை முதல்வரை வரவேற்க ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்'

ADDED : ஜன 08, 2026 06:02 AM
மதுரை: 'மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஆகியோரை வரவேற்க வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்' என அம்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை உத்தங்குடியில் இக்கூட்டம் அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி பேசுகையில் ஜன.,16 பாலமேடு ஜல்லிக்கட்டை துணைமுதல்வர் உதயநிதியும், 17ல் அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டை முதல்வர் ஸ்டாலினும் துவக்கி வைக்கவுள்ளனர். அவர்களுக்கு ஒரு லட்சம் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, பகுதி செயலாளர்கள் சசிகுமார், மருதுபாண்டியன், பொதுக் குழு உறுப்பினர்கள் முருகானந்தம், மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.