/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்கல்
/
இன்று ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்கல்
ADDED : மார் 02, 2026 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இன்று (மார்ச் 2) பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்கப் படுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வேண்டும் என முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் பூர்வீக குடியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதை வலுப்படுத்தும்விதமாக ஆன்மிக சிந்தனையாளர்கள், முருக பக்தர்கள் இன்று திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் பங்கேற்க வேண்டுமென முருக பக்தர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அவர்களுக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ருத்ராட்சம் வழங்கப் படுகிறது.

