sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பணி நிறைவு பெறாத சுரங்க பாதைக்குள்  விழுந்து ஒருவர் பலி

/

 பணி நிறைவு பெறாத சுரங்க பாதைக்குள்  விழுந்து ஒருவர் பலி

 பணி நிறைவு பெறாத சுரங்க பாதைக்குள்  விழுந்து ஒருவர் பலி

 பணி நிறைவு பெறாத சுரங்க பாதைக்குள்  விழுந்து ஒருவர் பலி


ADDED : பிப் 03, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகமலை புதுக்கோட்டை: மதுரை கருமாத்துார் அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் விஜயபாண்டி, 28. கப்பலுாரில் உள்ள கார் கம்பெனியில் விற்பனை ஆலோசகராக பணிபுரிந்தார். நேற்று இரவு 10:30 மணிக்கு வடபழஞ்சியில் உள்ள உறவினரின் துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு டூவீலரில் வேகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வடபழஞ்சி ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள லெவல் கிராசிங் 10ல், பணி நிறைவு பெறாத, கழிவுநீர், குப்பை நிரம்பிய ரயில்வே சுரங்கப்பாதை அருகே வந்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் தவறுதலாக டூவீலருடன் சுரங்கப் பாதைக்குள் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

''இப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கிறோம். ஒருசிலரின் எதிர்ப்பால் பணியை மேற்கொள்வதில் ரயில்வே நிர்வாகத்திற்கு சிக்கல் நீடிக்கிறது. அடிக்கடி விபத்து, உயிர்பலி ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சமரசம் செய்து பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்தனர்.






      Dinamalar
      Follow us