/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கணக்கு காண்பிக்க சரியான எடை; கார்டுதாரர்களுக்கு குறைவான எடை
/
கணக்கு காண்பிக்க சரியான எடை; கார்டுதாரர்களுக்கு குறைவான எடை
கணக்கு காண்பிக்க சரியான எடை; கார்டுதாரர்களுக்கு குறைவான எடை
கணக்கு காண்பிக்க சரியான எடை; கார்டுதாரர்களுக்கு குறைவான எடை
ADDED : பிப் 03, 2026 06:47 AM
மேலுார்: மேலுார் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறைவான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சந்தைப்பேட்டை, முகமதியர்புரம் ரேஷன் கடைகளில் 2500க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதை தடுக்க அரசு பி.ஓ.எஸ்., இயந்திரம், தராசை 'ப்ளூடூத்' மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை சரியான எடை வைத்து முன்கூட்டியே பில் போடும் ஊழியர்கள், பொதுமக்களிடம் அதனை வழங்காமல் எடையை குறைத்து பொருட்களை வழங்குகின்றனர்.
கார்டுதாரர்கள் கூறியதாவது: அரிசி 20 கிலோவிற்கு பதில் 17 கிலோ, பருப்பு ஒரு கிலோவிற்கு பதில் 800 கிராம், சீனி ஒரு கிலோவிற்கு பதில் 850 கிராம் உள்ளது. புகார் அளித்தால் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகளிடம் கூறினால் பெயரளவில் ஆய்வு செய்கின்றனர். முதியவர்களுக்கு வீடு தேடிச்சென்று பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டும் வழங்க மறுக்கின்றனர் என்றனர்.
டி.எஸ்.ஓ., விவேகானந்தன் கூறுகையில், '70 வயதை எட்டாதவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. எடை குறைவு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வர்' என்றார்.

