ADDED : மே 18, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கீழக்கரை ஏறு தழுவுதல்அரங்கத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிநடந்தது.
அமைச்சர்கள் மூர்த்தி, பெரிய கருப்பன் துவக்கி வைத்தனர். 909 காளைகள், 380 வீரர்கள் களம் கண்டனர்.
வெற்றி பெற்ற காளை, வீரர்களுக்கு சைக்கிள், டிரசிங் டேபிள், கேஸ் ஸ்டவ், கட்டில், பீரோ, மிக்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
காயமடைந்த 28 பேரில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மதுரை காஞ்சாரம்பேட்டை பகுதி உசிலம்பட்டி காளை உரிமையாளர் காத்தாளி 50, இறந்தார்.
இந்த அரங்கில்மே 24, 26, 27 மற்றும் 31ல் தொடர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.