நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜேந்திரன் மகன் திருமூர்த்தி 42. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இடபிரச்னை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி 60, என்பவருடன் டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தனர்) சென்று மதுரையில் வழக்கறிஞரை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் சென்று கொண்டிருந்தனர்.
டி. கல்லுப்பட்டி- -எம் சுப்புலாபுரம் இடையே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் டூவீலரை ஓட்டி வந்த திருமூர்த்தி இறந்தார். கருப்பசாமி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.