ஆக்கிரமிப்பு பிளக்ஸ் போர்டுகள்
மதுரை தெற்குவாசல் சின்னக் கடை வீதியில் ஆக்கிரமிப்பு செய்து பிளக்ஸ் போர்டுகள் வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அசோக், தெற்குவாசல்.
ஆக்கிரமிப்பு அட்டகாசம்
மதுரை வைரவநத்தம் கிராமத்தில் வல்லக்குளம் பகுதியில் அங்கன்வாடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டடத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாய் உள்ளன. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜான்சிராணி, வைரவநத்தம்.
கால்வாய் எங்கும் காலி பாட்டில்கள்
மதுரை தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு வடக்கு புறமாய் அமைந்துள்ள கால்வாய் காலி குடிநீர் பாட்டில்களாலும், கழிவுகளாலும் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மாநகராட்சி நிர்வாகம் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகசுப்ரமணியன், தாசில்தார் நகர்.
கழிவு நீர் செல்ல வழியில்லை
மதுரை ஆனையூர் கருப்பசாமிநகர் பகுதி வாய்க்காலில் குப்பை அடைத்து கழிவு நீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாய்க்காலை துார்வார நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தரன், ஆனையூர்.
செயல்படாத சிக்னல்
மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனியில் 2 மாதங்களுக்கு முன்பு டிராபிக் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் செயல்படாத நிலையில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. ரோட்டை கடக்கும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
- பாபு, மாடக்குளம்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
மதுரை தத்தனேரி மெயின் ரோடு, சிவகாமி நகர் மேலகைலாசபுரத்தில் மின் கம்பம் சாயும் நிலையில் உள்ளது. அவ்வழியே செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கின்றனர். ஆபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாண்டிய ராஜ்குமார், சிவகாமி நகர்.
திகில் ரோடு
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் வழியே செல்லும் ரோட்டில் பயணம் செய்வதே திகிலாக உள்ளது. ஒரே நேரத்தில் இரு புறமும், வாகனங்கள் வருவதற்கு வழி இல்லாத நிலை உள்ளது. இரவில் மின் விளக்கும் இல்லாததால், முந்தி செல்லும் வாகனங்கள் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்கின்றன.
- சுரேஷ், அவனியாபுரம்.