sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : அக் 31, 2025 01:48 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்கும் மழைநீர்

மதுரை செல்லுார் காளியம்மன் கோவில் தெருவில் மழைநீர் ரோட்டில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகேசன், செல்லுார்

குண்டு, குழி ரோடு

மதுரை பசுமலை வசந்தம் கார்டன் பகுதியில் குண்டும், குழியுமாக ரோடு உள்ளது. தெருவிளக்கும் எரிவதில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உமா, பசுமலை

அள்ளப்படாத குப்பை

மதுரை நியூ எச்.ஐ.ஜி., நகர் காலனியில் நான்கு ஆண்டுகளாக ரோட்டின் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரமேஷ், கே.கே.நகர்

சாக்கடை அடைப்பு

மதுரை எல்லீஸ் நகர் கருமாரி அம்மன் கோயில் பகுதியில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீட்டுக்குள் கழிவுநீர் வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமைத்த குழாய்கள் பழுதடைந்து விட்டன. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பத்மநாபன், எல்லீஸ் நகர்

மோசமான ரோடு

மதுரை முத்துப்பட்டி - அவனியாபுரம் ரோடு பழுதடைந்து மோசமாகி விட்டது. பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆறுமுகம், முத்துப்பட்டி

குடிநீர் பிரச்னை

மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் திருநாவுக்கரசர் தெருவில் குடிநீர் சரிவர வருவதில்லை. எப்போதாவது வரும் நீரிலும் சேறு கலந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பரதன், நேரு நகர்

கழிவறையா, நரகமா

மதுரை மாட்டுத்தாவணி பொதுமக்கள் கழிவறை படுமோசமாக உள்ளது. கழிவறையா இல்லை நரகமா என்றே தெரியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜாராம், பொதிகை நகர்






      Dinamalar
      Follow us