UPDATED : ஜூலை 27, 2026 07:25 PM
ADDED : ஜூலை 27, 2026 07:23 PM
மாநகராட்சி 92வது வார்டு அவனியாபுரம் எம்.எம்.சி., காலனி தங்கம் நகரில், பாதாள சாக்டைக்காக 10 ஆண்டுகளுக்கு முன் தோண்டிய ரோடு பணி இதுவரை முடியவில்லை. ரோடும் அமைக்கவில்லை. வெளியில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- பாலாஜி, அவனியாபுரம்.
ஆபத்தான பாலம் ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே போக்குவரத்து மிகுந்து காணப்படும் பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்துள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இரும்புக் கம்பிகள் நீட்டிக்கொண்டுள்ளன. விபரீதம் விளையும் முன் அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க வேண்டும்.
- விஜய், ஆரப்பாளையம்.
தெருநாய்கள் தொல்லை திருநகர் 8வது ஸ்டாப் காந்திஜி வீதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இரவில் பெண்கள், குழந்தைகள், டூவீலரில் செல்வோரை துரத்துவதால் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லட்சுமி, திருநகர்.
குண்டுகுழி ரோடு மதுரை அச்சம்பத்து ஏற்குடி ஊராட்சி அலுவலகம் முன்புள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- குமார், அச்சம்பத்து.
பொங்கும் சாக்கடை மதுரை பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணியால் பாதாள சாக்கடை வெளியேறும் வழிகள் அடைபட்டுள்ளது. கான்சாபுரம் மெயின் ரோட்டில் கழிவுநீர் பொங்குவதால், துர்நாற்றம் ஏற்படுகிறது. விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சந்தோஷ், செல்லுார்.
