ADDED : செப் 09, 2026 07:11 PM
* ஆபத்தான மருத்துவ கழிவுகள் புதுார் ஐயப்பன் கோயில் எதிரே சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றனர். இப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனசேகர், புதுார்.
* தெருநாய்கள் தொல்லை மதுரை காந்தி நகர், ராஜாஜி தெரு, ஜவஹர் தெரு, ஆசாத் தெரு பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக திரிகின்றன. தனியாக செல்வோரை கும்பலாக துரத்தி அச்சுறுத்துகின்றன. மாநகாராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்துச்செல்ல வேண்டும்.
- கபில், காந்தி நகர்.
* போக்குவரத்து நெரிசல் நாகமலை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை ஆக்கிரமித்து சிலர் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராம்குமார், நாகமலை புதுக்கோட்டை
* குப்பையால் துர்நாற்றம்
மதுரை கோ ஆப்டெக்ஸ் காலனி முன்பு குப்பைக் கிடங்கில் இறைச்சிக் கழிவுகளை அளவுக்கு அதிகமாக கொட்டுகின்றனர். இதனால் குடியிருப்போர் துர்நாற்றம், சுகாதார கேடுக்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேலு, கோ ஆப்டெக்ஸ் காலனி.
* தெருவிளக்கு இல்லை
வில்லாபுரம் காவிரி தெரு அரசு பள்ளி அருகே தெருவிளக்குகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
- குமார், வில்லாபுரம்.
