தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


UPDATED : அக் 26, 2026 06:51 PM

ADDED : அக் 26, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:51 PM ADDED : அக் 26, 2026 06:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கழிவுடன் வரும் குடிநீர்



மதுரை விசுவாசபுரி 3வது தெருவில் மாநகராட்சி குடிநீர் கழிவுநீராக வருவதால், குடிக்க முடியாமல் தவிக்கிறோம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீரை அருந்தவா குடிநீர் வரி செலுத்துகிறோம்.

- ரத்தினலட்சுமி, விசுவாசபுரி.

* தெருவிளக்கு எங்கே



மதுரை அவனியாபுரம் காவேரி தெருவில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவில் இவ்வழியே செல்வோர் ஒருவித பயத்துடன் செல்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், அவனியாபுரம்.

* ஆக்கிரமிப்பால் அவதி



மதுரை பைபாஸ் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா.

- ராமகிருஷ்ணன், மதுரை.

* பாதியில் பாதாள சாக்கடை



மதுரை வைகை நகர் அன்னை மீனாட்சி 6, 7, 8 வது தெருக்களில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை பணிகளும் பாதியில் நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜா, வைகை நகர்.

* தெருநாய்கள் அச்சுறுத்தல்



மதுரை எச்.எம்.எஸ்., காலனி பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் 2 பிரிவாக நின்று சண்டையிடுகின்றன. அவ்வழியே செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- யோகேஷ், எச்.எம்.எஸ்., காலனி.

* ரோடு படுமோசம்



மதுரை செல்லுார் 50 அடி ரோடு மேடு, பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோடு பள்ளத்தில் மழை நீர் தேங்கி அவ்வழி செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அலட்சியமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாண்டியன், செல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us