
மின்விளக்கு எரியவில்லை
மதுரை பைபாஸ் ரோடு காளவாசல் சந்திப்பில் உள்ள பாலத்தின் கிழக்கு பகுதி மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் ஒன்றுகூட எரியவில்லை. இதனால் பாலத்திலும். அதன் கீழ் பகுதியிலும் இரவு நேர போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜரத்தினம், சந்திரகாந்தா நகர்
சேதமடைந்த நிழற்குடை
தேனி மெயின் ரோட்டில் ஆலம்பட்டி பஸ்ஸ்டாப்பில் இடியும் தருவாயில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த நிழற்குடையை அகற்றி புதிதாக கட்டப்பட வேண்டும்.
- வெள்ளைச்சாமி, ஆலம்பட்டி.
வாய்க்காலில் கழிவுநீர்
மதுரை பைபாஸ் ரோடு நமச்சிவாய நகர் பகுதியில் 6 மாதங்களாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வாய்காலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் அபாயம் உள்ளது.
- ஷாம், நமச்சிவாய நகர் மதுரை,
குண்டு குழி ரோடு
மதுரை மேலஆவணி மூலவீதி ரோடுமுழுவதும் பெரிய பள்ளங்கள் உள்ளன. டூவீலரில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரோட்டை சரிசெய்ய வேண்டும்.
-நாகராஜா, சிம்மக்கல்.
வீடுகளுக்கு முன் கழிவுநீர்
மதுரை புதுார் டி.ஆர்.ஓ., காலனி வயல்காட்டுதெருவில் வீடுகளுக்கு முன் கழிவுநீர் ஓடுகிறது. புகார் அளித்தும் பயன் இல்லை. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் அபாயத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
- மந்தையன், டி.ஆர்.ஓ. காலனி.
ரோட்டில் கழிவுநீர்
மதுரை சிம்மக்கல் பஸ் ஸ்டாப் அருகே சாக்கடை நிரம்பி பல நாட்களாக கழிவுநீர் ரோட்டில் ஒடுகிறது. இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் அபாயத்தில் உள்ளோம். மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரிஷி, சிம்மக்கல், மதுரை.
மயானத்தில் ஆபத்து
மதுரை தத்தனேரி மயானத்தில் இறந்தவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் டைல்ஸ் கற்கள் உடைந்துள்ளது. அங்கே பதிவு செய்ய செல்வோர்தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. சரிசெய்ய நடவடிக்கை வேண்டும்.
- சங்கரபாண்டியன், செல்லுார், மதுரை.
தெரு நாய்களால் அச்சம்
மதுரை திருநகர் அண்ணாதுரை பூங்கா அருகில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. நடைப்பயற்சி செய்வோர் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தினகரன், திருநகர்.
சங்கமமாகும் கழிவுகள்
மதுரை நெல்பேட்டை ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே பாதாள சாக்கடை கழிவுகள், மீன், இறைச்சிக்கழிவுகளும், சங்கமமாகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட பாதை தொற்றுநோயை உருவாக்குவது போல் உள்ளது. நடவடிக்கை தேவை.
- ஸ்ரீதர்பாபு, மதுரை.
கால்வாயில் குப்பை
மதுரை இஸ்மாயில்புரம் காயிதேமில்லத் நகர் 1வது தெரு வழியாக செல்லும் பனையூர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை நிறைந்துள்ளது. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரப்புகிறது. குப்பையை அகற்ற வேண்டும்.
- அப்துல், நெல்பேட்டை.
உயரமான வேகதடையால் விபத்து
சோழவந்தான் தென்கரை பகுதி புதிய ரோட்டில் அதிக உயரத்தில் வேகத்தடை அமைத்துள்ளனர். இது பெரும் சுவர் போல் எழுப்பப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதனை சீராக அமைக்கப்பட வேண்டும்.
- ஆதித்ய ரூபன், தென்கரை.
சிக்னல் அமைக்க வேண்டும்
மதுரை - சிவகங்கை ரோட்டில் பள்ளிகள் அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க இப்பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும்.
-மலைக்கண்ணன், மேலமடை.
மின்கம்பம் ஆக்கிரமிப்பு
மதுரை செல்லுார் மீனாட்சிபுரம் குலமங்கலம் சாலையில் புதியதாக ரோடு அமைக்கப்பட்டது. ரோட்டின் நடுவே மின்கம்பங்கள் உள்ளதால் வாகனங்கள் செல்ல தடையாக உள்ளது.
-சத்தியமூர்த்தி, எஸ். ஆலங்குளம்.

