UPDATED : நவ 18, 2026 08:09 PM
ADDED : நவ 18, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ.10.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வெங்காய சந்தை கடைகளை முதல்வர் விஜய் காணொலியில் திறந்து வைத்தார். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ்குமார், எம்.எல்.ஏ., கல்லாணை குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.
இச்சந்தையில் மொத்தம் 75 கடைகள் உள்ளன. 12 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை பொறியாளர் ராமசாமி, உதவி கமிஷனர் தமிழரசன், செயற்பொறியாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
