UPDATED : நவ 18, 2026 08:02 PM
ADDED : நவ 18, 2026 08:02 PM
மதுரை: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை --–- குருவாயூர் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட விஸ்டாடோம் பெட்டி சேவை அடுத்தாண்டு பிப்., வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட்ட, கண்ணாடியால் ஆன விசாலமான ஜன்னல்கள் மற்றும் கூரை, சுழலும் இருக்கைகள் மூலம் இயற்கை அழகை 360 டிகிரி கோணத்தில் ரசிக்கும் வகையில் இருக்கும், இவ்வகை பெட்டிக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மதுரை –- குருவாயூர் ரயிலில் (16327) பிப்., 14 வரை, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்களில் குருவாயூர் - –மதுரை ரயிலில் (16328) பிப்., 15 வரை விஸ்டாடோம் பெட்டி இணைத்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
