ADDED : செப் 02, 2026 07:22 PM
மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய என்.எஸ்.எஸ். சார்பில் இணையவழி குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் அரும்பனுார் புதுாரில் நடந்தது.
ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், மதுரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.ஐ., கார்த்திகேயன் பேசியதாவது:
இணையவழி பண மோசடி, போலியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதள மோசடிகள், ஓ.டி.பி., மற்றும் வங்கி விவரங்களைப் பகிர்வதால் ஆபத்து ஏற்படும். இதில் சிக்காமல் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஓ.டி.பி., பின் நம்பர், பாஸ்வேர்டு, வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது. சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகளைத் திறக்கக்கூடாது. பண மோசடி ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றனர். திட்ட அலுவலர்கள் சித்ரா, ஆரோக்கியமேரி, வேணுதேவன் ஒருங்கிணைத்தனர்.
