/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையாற்றில் அழகர் இறங்குவதை தரிசிக்க ஏ.வி. பாலத்தில் 50 கார்களுக்கு மட்டும் அனுமதி கலெக்டர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ADDED : ஏப் 12, 2025 04:32 AM

மதுரை : மதுரையில் சித்திரைத் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி. அரவிந்தன், ஆர்.டி.ஓ., ஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: பொதுமக்கள் நலன்கருதி போதிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து, வாகன நிறுத்தம், மக்கள் கூட்டத்தை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதிய கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். மீனாட்சி கோயில் தேரோட்ட நிகழ்வுக்கு முன் தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை சான்றிதழ் பெற வேண்டும்.
பொது மக்களுக்கு அடிப்படையான குடிநீர், கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அவசர நிலையை சமாளிக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மதுரை நகர், வைகை ஆற்றுக்குள் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. விழா நாட்களில் கூடுதல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மதுரை வருவர். இங்கு நடைபெறும் கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
50 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நாளன்று ஏ.வி.பாலத்தில் அதிகபட்சம் வி.ஐ.பி.,க்களின் 100 கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தற்போது பாலப்பணி நடப்பதால் பாதுகாப்பு கருதி 50 கார்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளழகர் இறங்கும் இடம் அருகே ஆற்றில் பால கட்டுமான பொருட்கள் மொத்தமாக அகற்றப்பட வேண்டும். திருவிழா நெருங்கும் நேரத்தில் பாலப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.