/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரப்ஸன், கலெக் ஷன், கமிஷன் மட்டுமே தி.மு.க.,ஆட்சியில் நடக்கிறது: பழனிசாமி
/
கரப்ஸன், கலெக் ஷன், கமிஷன் மட்டுமே தி.மு.க.,ஆட்சியில் நடக்கிறது: பழனிசாமி
கரப்ஸன், கலெக் ஷன், கமிஷன் மட்டுமே தி.மு.க.,ஆட்சியில் நடக்கிறது: பழனிசாமி
கரப்ஸன், கலெக் ஷன், கமிஷன் மட்டுமே தி.மு.க.,ஆட்சியில் நடக்கிறது: பழனிசாமி
ADDED : செப் 05, 2025 04:07 AM

உசிலம்பட்டி: ''கரப்ஸன், கலெக் ஷன், கமிஷன் மட்டுமே தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மாடல் அரசு, பெயிலியர் மாடல் அரசு,'' என, உசிலம்பட்டியில் நடந்த எழுச்சி பயண பிரசாரத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேசினார்.
அவர் பேசியதாவது: உசிலம்பட்டி எப்போதுமே அ.தி.மு.க.,வின் எக்கு கோட்டை. விவசாயிகள் நிறைந்த தொகுதி. நானும் ஒரு விவசாயி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தான் முதன் முதலாக உசிலம்பட்டிக்கு 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 58 கால்வாயில் தண்ணீர் நிரந்தரமாக திறக்கப்படும்.
வைகை அணையை தூர்வாருவோம். நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி உசிலம்பட்டி மக்கள் எப்போதும் விவசாயம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவோம். காவிரி மேலாண்மை திட்டத்தை போல வைகை அணையை தூர்வாரும் திட்டத்தையும் வைத்திருந்தோம். ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இந்திய அளவில் உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து தேசிய அளவில் விருதுகளை பெற்று தந்தது அ.தி.மு.க., அரசு.85 சதவீதம் ஏழைகளுக்கு வீடு, தாலிக்கு தங்கம் 12 லட்சம் பேருக்கு என நிதியை கொடுத்தது. அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்த உடன் இந்தத் திட்டங்கள் தொடரும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம், மூக்கையாத்தேவருக்கு சிலை வைக்கப்பட்டது.
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மூக்கையாத்தேவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றார். எதிர்கட்சி துணை தலைவர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், மருத்துவ அணி மாநிலத்துணைச் செயலாளர் விஜயபாண்டியன், நகர் செயலாளர் பூமாராஜா, ஜெ பேரவை மாநில துணை செயலாளர் துரைதனராஜன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பால்பாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், மாணவரணி மாவட்ட செயலாளர் மகேந்திரபாண்டி, எழுமலை பேரூராட்சி செயலாளர் வாசிமலை, செல்லம்பட்டி அ.தி.மு.க., இளைஞரணி நிர்வாகி சசிக்குமார் பண்பாளன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.