/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் விமானம் நிலையம் முதல் மாநாடு இடம் வரை வரவேற்பும் கிடையாது
/
த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் விமானம் நிலையம் முதல் மாநாடு இடம் வரை வரவேற்பும் கிடையாது
த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் விமானம் நிலையம் முதல் மாநாடு இடம் வரை வரவேற்பும் கிடையாது
த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் விமானம் நிலையம் முதல் மாநாடு இடம் வரை வரவேற்பும் கிடையாது
ADDED : ஆக 09, 2025 05:09 AM
மதுரை: மதுரையில் ஆக.,21ல் நடக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாட்டில், கட்சி தலைவரான விஜய் மட்டுமே பேசுகிறார். அவருக்கு விமான நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை வரவேற்பு அளிக்கப்படாது எனவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களை குறிவைத்து மதுரை பாரபத்தியில் த.வெ.க., மாநாடு ஆக.,21ல் நடக்கிறது. இதற்காக மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்க 42 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது: கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக மதியம் 3:15 மணி முதல் இரவு 7:00 மணி வரை மாநாடு நடத்தப்படுகிறது. கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது.
மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அவர் மட்டுமே பேசுவார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது.
ஆண்கள் 1.20 லட்சம் பேர், பெண்கள் 25 ஆயிரம் பேர், முதியவர்கள் 4500 பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் பங்கேற்கின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. மாநாட்டிற்காக 750 வேன்கள், 300 பஸ்கள், 250 கார்கள், ஆயிரம் டூவீலர்களில் தொண்டர்கள் வருகிறார்கள். 3 இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்பட உள்ளது. மாநாடு வளாகத்திற்குள் தொண்டர்கள் வந்து செல்ல 18 வழிகள் அமைக்கப்பட உள்ளன. ஆண், பெண் என தனித்தனி வழிகள் உண்டு. பெண்கள் பகுதியில் பெண் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். முதியவர்களுக்கு தனி இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. 400 தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மாநாடு வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாநாடு நிகழ்ச்சிகளை கண்காணிக்க 'கன்ட்ரோல் ரூம்' ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.