நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : பரவை சத்தியமூர்த்தி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜி.எச்.சி.எல்., டெக்ஸ்டைல் பவுண்டேஷன் நிதி மூலம் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் பழுதடைந்த 6 கட்டடங்கள் புனரமைத்து ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் தலைமை வகித்தார்.
நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், மேலாளர் அசோக்குமார் கட்டடங்களை திறந்து வைத்தனர். நிறுவன சமூகப் பணி அலுவலர் சுஜின், சமயநல்லுார் வட்டார மருத்துவ அலுவலர் பத்மாவதி, டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும் சுகாதார நிலையத்திற்கு தேவையான 120 விழிப்புணர்வு பதாதைகள் வழங்கப்பட்டன. மருத்துவ அலுவலர் அருணா நன்றி கூறினார்.