நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் உண்டியல் நேற்று (நவ., 25) திறந்து எண்ணப்பட்டது.
கோயில் துணைக் கமிஷனர் செல்லத்துரை, கூடலழகர் கோயில் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் கர்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருட்செல்வன், ஊழியர்கள் பங்கேற்றனர். ரூ. 7 லட்சத்து 88 ஆயிரத்து 845 ரொக்கம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

