/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காவல் உதவி மையங்கள் எஸ்.பி., திறப்பு
/
காவல் உதவி மையங்கள் எஸ்.பி., திறப்பு
ADDED : நவ 19, 2024 05:53 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்களை எஸ்.பி., அர்விந்த் திறந்து வைத்தார்.
இப்பகுதியில் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் சார்பில் 25 இடங்களில் 64 கண்காணிப்பு கேமராக்களும், மூன்று இடங்களில் 35 நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவோரை தானாக படம் பிடித்து காட்டும் நவீன தொழில்நுட்பம் உடையது.
டி.எஸ்.பி., ஆனந்த்ராஜ், இன்ஸ்பெக்டர் வளர்மதி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் பாலச்சந்திரன், பொருளாளர் கேசவன், எஸ்.ஐ.,க்கள் கணேஷ்குமார், துரைமுருகன், கஜேந்திரன், சரஸ்வதி பங்கேற்றனர். போலீஸ்காரர் பிரேம்நாத் நன்றி கூறினார்.

