ADDED : அக் 19, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மாற்றுத்திறனாளிகள் வீல்சேருடன் பயணிக்கும் வசதியுள்ள 20 தாழ்தள அரசு பஸ்களை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சிங்காரவேலு, உதவி மேலாளர் யுவராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த பஸ்களில் முதியோர், குழந்தைகள் எளிதில் ஏறி இறங்க வசதியாக தாழ்தளமாக அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வீல்சேருடன் அமர்ந்தவாறே பயணிக்கலாம். பஸ்சின் மதிப்பு தலா ரூ.ஒரு கோடி. மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ்ஸ்டாண்டுகளில் இருந்து மேலுார், காரியாபட்டி, ஊமச்சிக்குளம், ரிங்ரோடு உட்பட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

