sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலைபேசியால் இயங்கும் மோட்டார் மானியத்தில் பெற வாய்ப்பு

/

அலைபேசியால் இயங்கும் மோட்டார் மானியத்தில் பெற வாய்ப்பு

அலைபேசியால் இயங்கும் மோட்டார் மானியத்தில் பெற வாய்ப்பு

அலைபேசியால் இயங்கும் மோட்டார் மானியத்தில் பெற வாய்ப்பு


ADDED : ஜன 01, 2025 06:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அலைபேசி மூலம் மின்மோட்டாரை இயக்கும் கருவி மற்றும் பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டாரை மானியத்தில் பெறுவது குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

விவசாயிகள் இரவு, மழைக்காலங்களில் வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பம்புசெட்களை இயக்கச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது பாம்பு, விஷப்பூச்சிகள் கடிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, தங்கள் வீடுகளில் இருந்தவாறே பம்புசெட்களை இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது.

இதற்காக ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியின சிறு, குறுவிவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் 230 கருவிகள் வழங்கப்பட உள்ளன. பழைய மின்மோட்டாரை மாற்றி, புதிய மின்மோட்டார் வாங்க சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

'உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, மதுரை -11' என்ற முகவரி அல்லது 97877 33015 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, உசிலம்பட்டி என்ற முகவரி அல்லது 94436 77046ம் தொடர்பு கொண்டு அறியலாம்.






      Dinamalar
      Follow us