/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு
/
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு
ADDED : செப் 27, 2025 05:33 AM
மதுரை: மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் 'மை பாரத்' சார்பில், ஜன., 12 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு அறிவார்ந்த கருத்துகளுடன் பிரதமர் மோடியுடன் உரையாட 40 இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மத்திய அரசு இளைஞர் நலத்துறையின் மை பாரத் தமிழகம், புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் கூறியதாவது:
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மை பாரத், என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், 'வளர்ச்சி அடைந்த பாரதம் - இளம் தலைவர்கள் உரையாடல்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசியல் பின்புலமற்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து, அரசியலில் ஈடுபட வைப்பதே இதன் நோக்கம். இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோர், பிரதமர் மோடியை சந்தித்து 'வளர்ச்சி அடைந்த பாரதம்' குறித்த கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
போட்டிகள் போட்டிகளில் 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். விரும்புவோர் 'மை பாரத்' இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும். செப்.,1 முதல் அக்.,15 வரை https://mybharat.gov.in/quiz தளத்தில் முதற்கட்டமாக நடத்தப்பட்டு வரும் வினாடி வினா போட்டியில், 12 மொழிகளில் பங்கேற்கலாம்.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வெற்றி பெறுவோர் 2ம் சுற்றுக்கு தகுதி பெறுவர்.
அக்.,23 முதல் நவ.,5 வரை நடைபெறும் 2ம் சுற்றுப்போட்டியில், கொடுக்கப்படும் 8 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியாளர்கள் டிஜிட்டல் முறையில் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்.
10 சதவீத இளைஞர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர். நவ.,24 முதல் டிச.,8 வரை சென்னையில் நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில், கட்டுரைப்போட்டியில் தேர்வானவர்கள் அதுசம்பந்தமான விளக்கக் காட்சியை சமர்ப்பிக்க வேண்டும்.
தலைப்பிற்கு 5 நபர்கள் என 40 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.
ஜன.,10, 11ல் டில்லியில் 'வளர்ச்சி அடைந்த பாரதம்' - சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோர் ஜன.,12ல் டில்லி பாரத் மண்டபத்தில் பிரதமரை சந்தித்து, கருத்துகளை முன்வைக்கும் வாய்ப்பினை பெறுவர் என்றார்.