/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மயானத்திற்கு இடம் வழங்க எதிர்ப்பு
/
மயானத்திற்கு இடம் வழங்க எதிர்ப்பு
ADDED : நவ 22, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆனையூர் சிலையநேரி பகுதி முஸ்லிம்கள் இறந்தால் உடலை அடக்கம் செய்ய 7 கி.மீ., தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து இவர்கள் கோரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் 20 சென்ட் நிலம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. அந்த இடத்தை சீரமைக்க முயற்சி நடந்தது.
இந்நிலையில் ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கான மயான பகுதியில் இருந்து இடத்தை பிரித்துக் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்திய கம்யூ., மாவட்ட துணைத்தலைவர் வீரணசிங், ஊர் பிரமுகர் கண்ணன், வி.சி.க., கண்ணன், ஹிந்துமுன்னணி அழகர்சாமி, வி.ெஹச்.பி., தங்கவெங்கடேசன் தலைமையில் நுாற்றுக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.

