/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம சபை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு
/
கிராம சபை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு
ADDED : அக் 12, 2025 04:19 AM
மதுரை : மதுரை மாவட்ட கிராமங்களில் கிராம சபைகூட்டம் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் பிரவீன்குமார் பங்கேற்றார். மேலுார் கொடுக்கம்பட்டி ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்ததால் மக்கள் வெளிநடப்பு செய்தனர்.
உசிலம்பட்டி சீமானுாத்து ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பிரவீன்குமார், தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், சப் கலெக்டர் உட்கர்ஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல்லிவீரன்பட்டியில் இருந்து மயானத்திற்குச் செல்லும் வழியில் குறுக்கிடும் ரயில்பாதையில் தரைவழிப்பாலம் அமைத்துத் தரவேண்டும். தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.
கலெக்டர் பேசுகையில், ''எந்த ஒரு ஜாதி பெயரும் இல்லாத கிராமங்களை கொண்டுள்ள கிராம ஊராட்சியாக இந்த சீமானுாத்து சமத்துவத்துடன் இருப்பதும் பெருமைக்குரியது'' என பாராட்டினார்.
மேலுார் வலைச்சேரிப்பட்டியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு சாமி தலைமை வகித்தார். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொடுக்கம்பட்டி ஊராட்சியில் கொட்டாம்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவல்லி, ஊராட்சி செயலாளர் கனகராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை வேண்டாம் என மக்கள் கூறியதை அதிகாரிகள் தீர்மானமாக கொண்டு வர மறுக்கவே மக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சாத்தமங்கலத்தில் ஊராட்சி செயலாளர் தெய்வநாயகி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒத்தசேரி என்பது ஒத்தப்பட்டியாகவும், அய்யனார் காலனி என்பது அய்யனார் புரம் என மாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சோழவந்தான் விக்கிரமங்கலம் ஊராட்சியில் செயலாளர் தனபாண்டியன், தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் சங்கர், வி.ஏ.ஓ., ரவிராஜன் பங்கேற்றனர். குருவித்துறை ஊராட்சியில் செயலாளர் மனோபாரதி தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக மண்டல துணை பி.டி.ஓ., ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் பங்கேற்றனர்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் செயலாளர் சின்னமாயன் தீர்மானங்கள் வாசித்தார். மண்டல துணை பி.டி.ஓ., அனிதா வி.ஏ.ஓ., அழகு பங்கேற்றனர். தென்கரை கூட்டத்தில் செயலாளர் முனியராஜ் தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் திருப்பதி, வி.ஏ.ஓ., செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். இரும்பாடியில் செயலாளர் காசிலிங்கம் தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் சுமதி, வி.ஏ.ஓ., முத்துப்பாண்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா பேபி பங்கேற்றனர்.
சி.புதுாரில் நடந்த கூட்டத்தில் மக்கள் நலப்பணியாளர் கார்த்திகேயன் தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் ரங்கநாதன் பங்கேற்றார். பானா மூப்பன்பட்டி ஊராட்சியில் செயலாளர் மலைச்சாமி தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக மண்டல துணை பி.டி.ஓ., சந்திரா, எம்.எல்.ஏ., அய்யப்பன், வி.ஏ.ஓ., பவித்ரா பங்கேற்றனர். ரிஷபம் ஊராட்சி ராயபுரத்தில் நடந்த கூட்டத்தில் செயலாளர் முத்துவேலம்மாள் தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் கீதா பங்கேற்றார்.
நெடுங்குளம் ஊராட்சியில் செயலாளர் ரேவதி தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக உதவி பொறியாளர் ராஜேஸ்வரன், வி.ஏ.ஓ., முத்துக்கருப்பன் பங்கேற்றனர். எரவார்பட்டி ஊராட்சியில் செயலாளர் பால்பாண்டி தீர்மானங்கள் வாசித்தார். பற்றாளராக சுகாதார ஊக்குநர் ஒச்சாதேவன், உதவி வேளாண் அலுவலர் மணிகண்டன், கூட்டுறவுச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்றனர்.