/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அரசு மரியாதைக்கு பின் அதிகரிப்பு
/
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அரசு மரியாதைக்கு பின் அதிகரிப்பு
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அரசு மரியாதைக்கு பின் அதிகரிப்பு
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அரசு மரியாதைக்கு பின் அதிகரிப்பு
ADDED : அக் 26, 2024 06:15 AM

மதுரை : உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தும் அரசாணையால் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தானமாக பெறுவோரின் தேவையும் அதிகரித்து வருகிறது.
மாநில உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் மதுரையில் கூறியதாவது:
விபத்து மற்றும் சில வகை நோயால் மூளைச்சாவு அடையும் நோயாளியிடம் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், சிறுகுடல், எலும்பு, தோல், கருவிழிகளை தானமாக பெற்று, குறைந்தது ஏழு பேரை வாழ வைக்க முடியும்.
கடந்த, 14 மாதங்களில் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற, 294 பேரின் உடலுக்கு, கலெக்டர், டி.ஆர்.ஓ., அல்லது ஆர்.டி.ஓ., போன்ற அதிகாரிகள் மூலம் அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை, 30 சதவீத உறுப்பு தானம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. கடந்த 2022ல் மூளைச்சாவு அடைந்த, 156 பேரிடம் இருந்தும், 2023ல் மூளைச்சாவு அடைந்த 178 பேரிடம் இருந்தும் உறுப்புகள் தானமாக பெற்றுள்ளோம்.
இந்தாண்டு, அக்., 25 வரை 235 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுஉள்ளன. இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லை.
அதே நேரம், உறுப்பு தானம் பெறுவோரின் தேவையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சிறுநீரக தானம் பெறுவதற்காக, 7,300 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.