/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறப்பு குழந்தைகளுக்கு 'ஓரியான் 24' நிகழ்ச்சி
/
சிறப்பு குழந்தைகளுக்கு 'ஓரியான் 24' நிகழ்ச்சி
ADDED : பிப் 19, 2024 05:36 AM

மதுரை : திறனிழப்பு கொண்ட குழந்தைகளின் சிறப்பு திறன்களை வெளிப்படுத்த மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 'ஓரியான் 24' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிறப்பு குழந்தைகள் எனப்படும் மாற்றுத்திறனாளிகளிடம் மறைந்திருக்கும் திறன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடந்த நிகழ்ச்சியில் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.பி.எப்., இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் கற்பகவள்ளி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மருத்துவ நிர்வாகி பி.கண்ணன், குழந்தைகள் நல மருத்துவ பிரிவு தலைவர் ஏ.கண்ணன், குழந்தைகள் வளர்ச்சி சிறப்பு மருத்துவர் உமா, கல்வி, மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நாகராஜன், மரபியல் நிபுணர் பிரதீப்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
12 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மாறுவேட போட்டி, இசை, நடனம் உட்பட பலவற்றிலும் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.
மருத்துவமனை தலைவர் குருசங்கர் பேசுகையில், ''ஒவ்வொரு 10 குழந்தைகளில் ஒரு குழந்தை உடல், மனம், உணர்திறன் சார்ந்த திறனிழப்போடு பிறக்கிறது.
அவர்களுக்கு திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பது அரிது. பெற்றோரே அறியாத நிலையில் அக்குழந்தைகள் முழுத்திறனை எட்டுவதற்காக இந்நிகழ்வு நடத்தப்பட்டது'' என்றார்.

