ADDED : செப் 18, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் கால்நடை மருத்துவமனை ஆபத்தான வகையில் இடியும் நிலையில் உள்ளது.
இங்கு பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கால்நடை மருத்துவமனை சுற்று வட்டார பகுதி கால்நடைகளின் நோய் தீர்க்கும் முக்கிய மையமாக விளங்குகிறது. கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் பல இடங்களில் கூரை பூச்சுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையும் உள்ளது. கட்டடத்தில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு விரிசல்கள் வழியே மழைநீர் கட்டடத்திற்குள் செல்கிறது. விபரீதம் விளையும் முன் காலாவதியான கட்டடத்தை அகற்றி புதிதாக அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.