/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முறையின்றி கட்டப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டி
/
முறையின்றி கட்டப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : ஜன 11, 2025 05:03 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பாரதி நகரில் சேடப்பட்டி ஆண்டிப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர் தொட்டி குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
60 அடி உயரம் உள்ள இந்த தொட்டிக்கு தற்போது துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. துாண்களை முறையாக அமைக்காமல் சாய்ந்தவாறு அமைத்து உள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள துாண் ஒவ்வொரு விதமாக உள்ளது. தொட்டி கட்டப்படும் போதே கீழே விழும் அபாயம் உள்ளது. தொட்டியை முழுமையாக கட்டி தண்ணீர் நிரப்பினால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே தொட்டியை முறையாக கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர்.