ADDED : ஜன 10, 2025 05:20 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியம், அன்னை தெரசா மகளிர் பல்கலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்கலை வளாகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் நடத்தப்பட்டது.
வணிகவியல் துறை உதவி பேராசிரியை வள்ளி தேவசேனா வரவேற்றார். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசுகையில், ''காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பி வந்த ஜன.9 வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளில் இந்தியாவின் பெருமையை முதன்முதலில் வெளிப்படுத்திய உலகத் தலைவர் காந்தி'' என்றார்.
கல்வி அலுவலர் நடராஜன் பேசுகையில், ''காந்தி வெளிநாடுகளில் சந்தித்த சோதனைகளை இந்தியாவில் சாதனைகளாக மாற்றினார். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சோதனைகளை சிக்கலாக நினைக்காமல் சவாலாக எதிர்கொள்ள காந்தி அறிவுறுத்தினார்'' என்றார். இளநிலை உதவியாளர் நித்யா பாய் கேள்வி பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.

